பந்து போல் எகிறும் முட்டை !
Image Courtesy: BBC.CO.UK
முட்டையை கீழே போட்டால் என்னவாகும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லும் அல்லவா ? ஆனால், உங்களால் முட்டையை பந்து போல் எகிறச்செய்ய முடியும் ! எப்படி ?
– கோழி முட்டை -1
– 200 மி.லி. வினிகர் ( சமையலுக்கு உபயோகிப்பது)
– வாயகன்ற கண்ணாடி பாட்டில் (ஹார்லிக்ஸ் பாட்டில் போன்றது)
செய்முறை:
கண்ணாடி பாட்டிலில் முக்கால் அளவு வின்கரை ஊற்றவும்
அதனுள் மெதுவாக முட்டையை போட்டு மூடி விடவும்
சுமார் 72 மணி நேரம் அதாவது மூன்று நாட்கள் அப்படியே விட்டு வைக்கவும்
அதனுள் மெதுவாக முட்டையை போட்டு மூடி விடவும்
சுமார் 72 மணி நேரம் அதாவது மூன்று நாட்கள் அப்படியே விட்டு வைக்கவும்
Image Courtesy: BBC.CO.UK
பிறகு முட்டை எடுத்து கவனி. கெட்டியான வெள்ளை மேல் ஓடு மெல்லிய ஜவ்வு போன்ற படலமாக இருப்பதை காணலாம். அதை நன்னீரில் கவனமாக கழுவி மேலேயுள்ள மெல்லிய படலத்தை நீக்கி விடவும்.
Image Courtesy: BBC.CO.UK
இப்போழுது கண்ணாடி போல் தோற்றமளிக்கும், பந்து போல் எகிறும் முட்டை ரெடி !
Image Courtesy: BBC.CO.UK
அதை மேஜை மீது சுமார் பத்து அல்லது பதினைந்து செண்டி மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடவும். (எச்சரிக்கை: அதிக உயரத்திலிருந்து போட்டால் முட்டை சிதறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
என்ன நிகழ்கிறது ?
என்ன நிகழ்கிறது ?
காரணிகள்:
வினிகர் ஒரு பலவீனமான அமிலம் ஆகும் (5% அசிட்டிக் அமிலம்) முட்டை ஓடு கால்சியம் கார்பனேட் ஆனது. இரண்டும் ஒன்றாக சேரும்போது ஏற்படும் வேதியல் வினையால் கால்சியம் கார்பனேட் உடைக்கப்படுகிறது.இதன் காரணமாக கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி ஆகிறது (பட்த்தில் முட்டை மீது குமிழ்களை பார்க்கலாம்) இதன் விளைவாக முட்டை ரப்பர் போன்ற தோற்றத்தில் உருவாகிறது.
நன்றி
No comments:
Post a Comment