Wednesday, 14 October 2015
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி!
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.
அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது!
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களின் அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு வற்புறுத்தக் கூடாது என சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.செüத்ரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
பூஜ்ஜிய கழிவு மேலாண்மை பயிற்சி
தனியார் பள்ளிகளின் வசூல் வக்கிரகம் வெளியானது!
தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500
ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி, தமிழக பள்ளி கல்வித்துறை அங்கீகாரத்துடன், இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் படி செயல்படுகிறது. இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், கையில் மருதாணி போட்டுக் கொண்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்!
தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: க.ஸ்ரீபரத்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டமே காரணம் என ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)