தனியார் பள்ளிகளில், ஒன்பதாம்வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனுமதிக்கு அதிகமாக கூடுதல்வகுப்புகளை துவங்கிஉள்ளதாக புகார்கள்வந்துள்ளதால், திடீர் ஆய்வு நடத்த,மெட்ரிக்இயக்குனரகம்உத்தரவிட்டு உள்ளது. புதிய கல்வியாண்டை ஒட்டி, அரசு, அரசுஉதவிபெறும் மற்றும் தனியார்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடந்துவருகிறது. இதில், சில தனியார்
பள்ளிகளில், ஒன்பதாம்வகுப்பு முதல், பிளஸ்2 வரை, அனுமதியைமீறி, கூடுதல்எண்ணிக்கையில் மாணவர்களைசேர்த்து வருவதாக புகார்எழுந்துள்ளது.
சமீபத்திய,10ம் வகுப்புமற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில், ஏராளமான பள்ளிகளைச்சேர்ந்தமாணவ, மாணவியர், மாநிலத்தில்முதல் மூன்றுஇடங்களை பிடித்தனர்.இந்த மாநில, 'ரேங்க்'கைபயன்படுத்தி, குறிப்பிட்ட சில பள்ளிகள், வணிகமயமாக, அனுமதித்தஅளவைமீறிமாணவர்களை சேர்க்கின்றன. ஆனால், அதற்கானஉள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை.
பத்தாம் வகுப்பில் மாநிலரேங்க் பெற்றசில பள்ளிகள், ஒன்பது மற்றும்10ம் வகுப்புகளிலும்,பிளஸ் 2வில்மாநில, ரேங்க்பெற்ற சிலபள்ளிகள், பிளஸ்1 லும், அதிகபிரிவுவகுப்புகளைதுவங்கி, நுாற்றுக்கணக்கில்மாணவர்களை சேர்த்துள்ளதாகக்கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் சங்கத்தலைவர் சாமி சத்தியமூர்த்திகூறுகையில், ''தனியார் பள்ளிகளில், வணிகமயமாகமாணவர்களை சேர்க்கின்றனர். அங்கீகாரத்துக்கு மனு செய்த போது,காட்டியபிரிவுகள், மாணவர்களை விட, பலமடங்கு அதிகவகுப்புகளை தனியார் பள்ளிகள்துவங்கி உள்ளன. இதுகுறித்து, கல்வித் துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து, மெட்ரிக் இயக்குனரகஅதிகாரிகள் கூறுகையில், 'இந்த பிரச்னை தொடர்பாக,மாவட்ட மெட்ரிக்ஆய்வாளர்கள் மூலமும், மாநில அளவிலான அதிகாரிகள்மூலமும்,பள்ளிகளில்திடீர் ஆய்வுநடத்த உள்ளோம். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், பள்ளிகளுக்கானஅங்கீகாரம் மறுபரிசீலனை செய்யப்படும்' என்றனர்
No comments:
Post a Comment