Friday, 5 June 2015

தமிழை சரளமாக வாசிக்க, கணக்கு போட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம்

தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கமானஅறிவொளி இயக்கம்1990களில் தீவிரமாகசெயல்பட்டபோதுபாவலர் பொன்.கருப்பையா எழுதியஎண்ணும் எழுத்தும்அறிந் தால்இந்த மண்ணில்வாழ்க்கையே எளிதாம்..’ என்ற பாடல்பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.‘கற்ற ஒருவர் கல்லாத10 பேருக்கு பாடம் சொல்லித்தாருங்கள்’ என்றுஅறிவொளி இயக்கம்தன்னார்வத் தொண்டர்களை அழைத்ததுகால்நூற்றாண்டுகளுக்குப்பிறகுதற்போதுபடித்த ஒருவர்
படிப்பில் பின்தங்கிநிற்கும் 20குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்’ என்றுஅழைக்கிறது ‘எண்ணும் எழுத்தும்’ வாசிப்புஇயக்கம்.
இதுதொடர்பாக ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தை நடத்திவரும் யுரேகாஅறக்கட்டளை யின்இயக்குநர் டாக்டர் .ரவிசங்கர், ‘திஇந்துவிடம்கூறியதாவது:
எண்ணும் எழுத்தும்’ என்றஇயக்கத்துக்கு இப்போது என்ன தேவைஇந்தகேள்விஎல்லோருக்குமே எழும்மிக அவசரஅவசியமான தேவைஇப்போது இருக்கிறதுதங்கள்குழந்தைகளைநன்கு படிக்கவைக்கவேண்டும் என்றஎண்ணம் எல்லாப்பெற்றோருக்கும்அதிகரித்திருக்கிறது கடன் வாங்கியாவது படிக்கவைக்கிறார்கள்.

படிக்க தெரியாத குழந்தைகள்

ஆனால்குழந்தைகள் படிக்கிறதாஅரசு மற்றும்தனியார் பள்ளிகளில்ஆரம்பக் கல்விபடிக்கும்கிராமப்புறகுழந்தைகளில் பாதிபேருக்கு மேல் தமிழை வாசிக்கவோகூட்டல்கழித்தல்,பெருக்கல் போன்றசாதாரண கணக்குகளைக்கூடபோடவோ முடியவில்லை. ‘அசர்’ (ASER2014)என்ற கல்விக்கணக்கெடுப்பு ஆய்வு இதைச் சொல்கிறதுபலகிராமங்களுக்கு நேரடியாக களஅனுபவமாகச் சென்றுஇந்த நிலையைக்கண்டு வருந்தியிருக்கிறேன்இந்தபிரச்சினைக்குத்தீர்வு காண்பதுதான் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தின் நோக்கம்.

நான் படித்துவளர்ந்ததுஎல்லாம் சென்னைதான்எப்போதுமே குழந்தைகளின் கல்வி மீதும்,கணக்குப்பாடத்தின் மீதும்எனக்கு தனிஆர்வம் உண்டு.2008ல் சமச்சீர்க்கல்வித்திட்டம்தமிழகத்தில் அறிமுகமானபோது,6ம் வகுப்பு கணக்குப்பாடத்தைகுழந்தைகள்விரும்பிப் படிக்கும் வகையில் தொகுத்து வழங்கினோம்.‘எண்கள்பிறந்த கதைஎன்று கணக்கின்வரலாற்றை சிறுநூலாகவும் எழுதினேன்.

பிறகுநண்பர்களோடு சேர்ந்துகிராமங்களுக்குச் சென்று குழந்தை களின்கல்விவளர்ச்சிக்கான பணி களை செய்துவந்தேன்அப்போதுதான்,கல்வியில்பின்தங்கியிருக்கிற குழந்தைகள் தமிழ்வாசிக்கவும்எளிய கணக்குகளைப்போடவும் விளையாட்டுமுறையில் கற்றல்உபகரணங்களை உருவாக்கிக் கொடுத்தோம்இதுநல்லமாற் றத்தைஉருவாக்கியதுதயங்கி நின்ற பல குழந்தைகள்ஆர்வமாக வாசித்தார்கள்.இந்த கோடைவிடுமுறைக்குள் எப்பாடுபட்டாவது குழந்தைகளைவாசிக்கவைத்துவிடவேண்டும் என்றபேராவலோடு ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தைதொடங்கினோம்.

கோடை விடுமுறையில் வசதியான வீட்டுக்குழந்தைகள் நிறைய செலவழித்து கம்ப்யூட்டர்கிளாஸ்டான்ஸ் கிளாஸ்நீச்சல் பயிற்சிஎன்று கூடுதல்திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர்.வசதியில்லாத ஏழைக் குழந்தைகள் படிக்கவே சிரமப்படுகின்றனர்அவர்களைஅடையாளம்கண்டு அவர்களுக்குமே 15-ம்தேதி தொடங்கிஜூன் 30 வரைதினமும்ஒருமணிநேரம் வாசிப்புவகுப்பை நடத்தினால்தமிழை சரளமாகவாசிக்கவும்கணக்குகளைப்போடவும் தெரிந்து கொள்வார்கள்அதேநேரம்அந்தபயிற்சியானது அவர்களுக்குபிடித்தமானதாகவும்இருக்க வேண்டும்என்பதால்இதற்கெனஎளியகற்றல்உபகரணங்களையும் உருவாக்கினோம்.

கற்றல் உபகரணங்கள் இலவசம்

இந்த வாசிப்பு இயக்கத்தின்மூலம் ஆயிரத்துக்கும்மேற்பட்ட கிராமங்களில்எண்ணும் எழுத்தும்வகுப்புகளைநடத்த 40-க்கும் மேற்பட்டதன்னார்வ கல்விஅமைப்புகள் முன்வந்திருக் கின்றன.இது நல்லசமூக மாற்றத்துக்கான அறிகுறிதமிழகத்தின் எந்த பகுதியிலும் யாராவது ஆரம்பக்கல்விபடிக்கும் 20 குழந்தை களுக்கு இலவசமாக வகுப்புநடத்த தயார்என்றால்அவர்களுக்குப்பயிற்சியும்கற்றல் உபகரணங்களையும்இலவசமாக வழங்குகிறோம்.


இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

No comments:

Post a Comment