Thursday, 2 April 2015

1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை 25 சதவீதம் முதல் 250 சதவீதம் வரை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் (2015-16) 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை 25 சதவீதம் முதல் 250 சதவீதம் வரை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:
புத்தகங்களை அச்சிடுவதற்கான காகித விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பரிந்துரை வழங்கியுள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று, புத்தகங்களின் விலை அதிகரிக்கப்படுகிறது

No comments:

Post a Comment