திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நடைபெற்றமாநில அளவிலான கணிதத்திறன் மற்றும் கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுபரிசுகள் பெற்றனர்.
இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி கணித திறன் தேர்வில் வெற்றி பெற்று சிறப்பு பரிசான அண்ணா அறிவியல் மையத்தின் மெடலையும் ,ரொக்கமாக பணமும் ,கணித மாதிரி வடிவமைத்தல் போட்டியில் மாணவி மங்கையர்க்கரசி மூன்றாம் பரிசையும் ,இதே பிரிவில் மாணவி கிருஷ்ணவேணி நான்காம் பரிசையும் பெற்றனர். கணித மாதிரி வடிவமைத்தல் போட்டி புதியதாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கணித மாதிரி வடிவமைத்தல் போட்டியில் பிதாகரஸ் தேற்றம்,முற்றொருமைகள் ,விகிதமுறு எண்கள் ,பின்னம்,லாப,நட்டம்,தனி வட்டி கணக்கீடு ,பங்குசந்தையை விளக்கும் வரைபடம்,நிழற்கடிகரம், மாறி,மாறிலி,மெழுகுவத்தி கடிகராம்,ஆகியவற்றை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பயன்படுத்துதல் தொடர்பானவற்றை இப்பள்ளி மாணவர்கள் மாதிரியாக வடிவமைத்திருந்தனர்.இப்போட்டி களுக்கு மாணவிகளை தயார்செய்த ஆசிரியை முத்துமீனாள்,ஊக்க படுத்தி அழைத்து சென்ற பெற்றோரையும்,பரிசு பெற்ற மாணவிகளையும், பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.
கணித மாதிரி வடிவமைத்தல் போட்டியில் பிதாகரஸ் தேற்றம்,முற்றொருமைகள் ,விகிதமுறு எண்கள் ,பின்னம்,லாப,நட்டம்,தனி வட்டி கணக்கீடு ,பங்குசந்தையை விளக்கும் வரைபடம்,நிழற்கடிகரம், மாறி,மாறிலி,மெழுகுவத்தி கடிகராம்,ஆகியவற்றை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பயன்படுத்துதல் தொடர்பானவற்றை இப்பள்ளி மாணவர்கள் மாதிரியாக வடிவமைத்திருந்தனர்.இப்போட்டி
No comments:
Post a Comment